கண்ணி
-->
Mesh
பிணையம்-->
Network
இன்று
நாம் பயன்படுத்தும் இணையச்
சேவையிலுள்ள சிக்கல்களை
புரிந்தால்தான் ஏன் கண்ணி-பிணையம்
தேவை என்று விளங்கும்.
BSNL, Airtel, Act broadband போன்ற
நிறுவனங்களிடம் இருந்துதான்
நம்மில் பலர்,
இணையச்சேவையை
பெறுகிறோம்.
அவர்கள்
பலவகைகளில் பல்வேறு திட்டங்களை
வகுத்து அதற்கேற்றவாறு கட்டணம்
வாங்கிக்கொள்கிறார்கள்.
எடு.கா:
1.
மாதம்
500
உருவாய்க்கு,
1GB, 512Kbps வேகத்தில்.
2.
மாதம்
800
உருவாய்க்கு,
2GB, 1Mbps வேகத்தில்.
- BSNL வாடிக்கையாளர் இன்னொரு BSNL வாடிக்கையாளருடன் உரையாடலாம்.
- Airtel வாடிக்கையாளர் இன்னொரு Aitel வாடிக்கையாளருடன் உரையாடலாம்.
- BSNL வாடிக்கையாளர் இன்னொரு Airtel வாடிக்கையாளருடனும், ஒரு Airtel வாடிக்கையாளர் இன்னொரு BSNL வாடிக்கையாளருடனும் கூட உரையாடலாம்.
இது
எப்படி நிகழ்கிறது என்றவற்றையெல்லாம்
நாம் புரிந்துகொள்ளாமலேயே
பயன்படுத்தத் தான்
நாம்
அவர்களுக்கு கட்டணம்
செலுத்துகிறோம்.
சரி சிக்கலென்ன என்பதை பார்ப்போம்.
ஒரு
ஊரில் கோவலன் என்ற ஒரு இளைஞன்,
கன்னகி
என்ற இளைஞகியிம் வாழ்ந்து
வருகிறார்கள்.
கோவலன்
கன்னகிக்கு,
WhatsApp-ல்
ஒரு செய்தி அனுப்புகிறான்.
அந்தச்செய்தி
அவனுடைய கைபேசியிலிருந்து,
கிளம்பி
கன்னகியின் கைபேசியை அடையும்
வரை என்ன நடக்கிறது என்று
கிழே காணலாம்.
1.
கோவலனிடமிருந்து
கிளம்பிய செய்தி,
BSNL சேவைமையத்துக்கு
செல்கிறது.
2.
அங்கிருந்து
இணயத்தின் வழியாக,
அமெரிக்க
நாட்டின்,
WhatsApp சேவைமையத்திற்கு
செல்கிறது.
3.
அமெரிக்காவின் WhatsApp
சேவையகம்,
அச்செய்தியை
கன்னகி இணைந்திருக்கும்,
Airtel-லின்
சேவைமையத்திற்கு அனுப்பும்.
4.
கடைசியாக,
Airtel-லின்
சேவைமையம்,
கன்னகியின்
கைபேசிக்கு அனுப்பும்.
பக்கத்து
தெருவில் உள்ள,
கன்னகியின்
கைபேசிக்கும் போக வேண்டிய
செய்தி ஏன் கண்டங்கள் கடந்து,
அமரிக்காவின்
வழியாக,
போய்ச்சேர
வேண்டும்?
எதோ
ஒன்று இடிக்கிறதல்லவா?
இதில்
பலவகையான சிக்கல்ள் உள்ளன.
தொழிநுட்ப அடிப்படையில்:-
1. BSNL
Airtel WhatsApp,
இவற்றில்
ஒன்று வேலைசெய்யாமல் போய்விடலாம்.
ஒன்று
பழுதானாலும்,
செய்தி
கன்னகியை போய்ச்சேராது.
2. இவைமூன்றயும்
இணைக்கும் மேகம் போன்ற ஒரு
அமைப்பு உள்ளதே அது இவர்களை
போல பலநூறு சேவைமையங்களின்
பிணையம்.
அவற்றில்
பழுது ஏற்பட்டாலும்,
தொடர்பில்
சிக்கல் எழலாம்.
எப்படி
பழுதடையும்?
பல்வேறு
காரணிகள் அதற்கு வகைசெய்யலாம்.
இயற்கை
சீற்றம் அண்மையில் சென்னையிலும்
கடலூரிலும்,
மக்கள்
தொடர்பை துண்டித்தது போல.
உரிமை, அதிகார ரீதியாக:-
1.
சேவை
நிறுவனங்கள் செய்திகளை
படிக்கலாம்(இது
பரவலாக நடக்கிறது)
2.
நிறுவனங்கள்
செய்திகளை தடுக்கலாம்.
3.
செய்திகளை
வேறொரு நிறுவனத்துக்கோ,
ஆளுக்கோ
விற்கலாம்.
4.
நம்
எங்கு போகிறோம்,
யாரிடம்
என்ன பேசுகிறோம் என்பதை
கண்கானிக்கா அரசுக்கு உதவலாம்.
உங்களிடம்
கொஞ்சம் நிலம் இருக்கிறது.
கிணறு
வெட்டலாம் என்று முடிவெடுத்து
சிலரை அழைத்து,
கிணறும்
வெட்டிவிட்டீர்கள்.
கிணறு
வெட்டிய சிலர்,
"நாங்கள்
சொல்லும்போதுதான்,
கிணற்றிலிருந்தி
தண்ணீர் எடுக்கவேண்டும்.
நாங்கள்
அனுமதித்தால் நீங்கள் எடுத்த
தண்ணிரை பக்கத்து வீட்டுகாரருக்கு,
கொடுக்கலாம்.”
என்றெல்லாம்
சொன்னால் என்ன செய்வீர்கள்?
கடையில்
பணம் கொடுத்து,
இரண்டு
நூல் வாங்குகிரீற்கள்.
அக்கடைக்காரர்.
முதல்
நூலை காலையில் பத்து மணியிலிருந்து,
பிற்பகல்
இரண்டு மணிவரைதான் படிக்கவேண்டும்.
இரண்டாம்
நூலை படித்து முடித்துவிட்டு,
திரும்பக்கொடுத்துவிட
வேண்டும்.
இல்லை
என்றால் எரித்துவிட வேண்டும்.
இரண்டு
நூல்களையும் வேறு யாரிடமும்
கொடுக்கக்கூடாது என்றெல்லாம்
சொன்னால் என்ன செய்வீர்கள்?
இணையச்சேவை
நிறுவனங்கள் இதைதான் நாசுக்காக
செய்கிறது.
தொடக்கத்திலிருந்து
பழகிவிட்டதால்,
இதை
நாம் உணராமல்போய்விட்டோம்.
தீர்வு
மேலே
எப்படி இந்த நிறுவனங்கள்
அவர்கள் அதிகாரத்தை தவறாக
பயன்படுத்தமுடியும் என்று
பார்த்தோம்.
நாம்
இதற்கு என்ன செய்யலாம்?
நாம்
நமக்குள் பயன்படுத்திகொள்ள
வகையில் ஒரு பிணையமைப்பை
உருவாக்க வேண்டும்.
எப்படி
இதை செய்யலாம் என்பதற்கு
சுருக்கம்மான பதில் கிழே.
1.
கோவலனிடமிருந்து
புறப்பட்ட செய்தி நிறுவனங்களின்
மையங்களுக்கு செல்லாமல்
கன்னகியின் கைபேசியை அடையவேண்டும்.
மேலே
பார்த்த படத்தை கொஞ்சம்
பெரிதாக்கினால் அது கீழே
இருப்பதுபோலிருக்கும்.
நாம்
அனைவரும் வைத்திருக்கும்,
WiFi router-ஐ
மற்ற WiFi
router-களோரோடு
பேசவைத்துவிட்டால்,
நிறுவனங்களின்
உதவி/ஊடுறுவல்
இல்லாமல் நாம் பேசிக்கொள்ளலாம்.
0 comments:
Post a Comment
தங்களது கருத்துக்களை இங்கே வெளியிடவும்...